இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில், தற்போது இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாக் கிரௌலி 0 (7), சீல்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார். அடுத்து லீஸ், ரூட் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நிலையில் லீஸ் 30 (138) விக்கெட்டை வீராச்சாமி பெர்மோள் எடுத்துக் கொடுத்தார்.
அதன்பிறகு போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. ரூட், லாரன்ஸ் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்நிலையில் லாரன்ஸ் 91 (150) ரன்கள் எடுத்து, ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார்.தொடர்ந்து. பென் ஸ்டோக்ஸ் உடன் ரூட் பார்டனர்ஷிப் அமைத்த நிலையில் ரூட் 153 (316) ரன்கள் எடுத்து, கேமர் ரோச் பந்துவீச்சில் போல்ட் ஆகி நடையைக் கட்டினார்.