மத்திய பிரதேசம் இந்தூரில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி துவக்கம் :
மத்திய பிரதேசம் இந்தூரில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுமா..? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காரணம் போட்டி தொடங்கிய சில மணிநேரங்களிலே ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சிற்கு இந்திய அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.
திணறும் இந்திய அணி..:
டாஸ் வென்று பேட்டிங்கில் தொடங்கிய இந்திய அணி. போட்டி தொடங்கிய சில மணிநேரத்திலே இந்திய அணியின் இருக்கும் சிறந்த பேட்டிங் வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா அணியின் வேகமான பந்து வீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி பெற்று கொண்டிருகின்றனர். இதுவரை 45 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
கடந்த இரண்டு தோல்விகளுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியா அணி வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் தற்போது விளையாடி வருவதாக நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா அணியின் வேகமான பந்துவீச்சிற்கு இந்திய அணியின் சிறந்த பேட்ஸ் மேன்களாக விளங்குபவர் கூட தோல்வி பெறுவது ஆச்சிரியமாக தான் உள்ளது என ஊடகங்கள் மத்தியில் கூறிவருகின்றனர்.
வெற்றி யார் பக்கம்..:
இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த முறை இந்தியாவிற்கு பாராட்டும், ஆஸ்திரேலியாவுக்கு விமர்சனமும் வந்தது ஆனால் இந்த முறை ரிசல்ட் தலைகீழாக மாறும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் வேகப்பந்து வீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கிறது. போட்டி செல்லும் வேகத்திற்கு ஆஸ்திரேலியா அணியின் பக்கம் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் தொடர் தோல்விகளின் விமர்சங்கள் தான் வேகமான வெற்றி வாய்ப்பை நெருங்குவதற்கு காரணம் என்றும் இதேநிலை தொடர்ந்தால் இந்திய அணி வெற்றியை தக்க வைப்பது என்பதை விட வெற்றி அடையுமா என்பதே சந்தேகம் தான் என்று கிரிக்கெட் ரசிகர் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அடுத்து களம் இறங்கும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பிற்கு இடம் கொடுக்குமா அல்லது வெற்றி வாகை சூடுமா..? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியும்.
மேலும் இந்திய அணியில் தற்போது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா அணியின் வெற்றிக்கே உண்டான தனித்துவத்தை பின்பற்றாமல் போனது தான் இந்த பின்னடைவுக்கு காரணமா..? இதற்கு முன்பு கேப்டனாக இருந்த கோலி, தோனி போல் அணி வீரர்களான அஸ்வின், ஜடேஜாவை சரியான முறையின் பேட்டிங்கிற்கு பயன்படுத்தவில்லையா..? என்பது போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது. இன்னும் சில நேரத்தில் பேட்டிங்கில் இறங்கும் ஆஸ்திரேலியா அணி எப்படி விளையாட இருக்கிறார்கள் என்பதை தற்போது பொறுத்திருந்து பார்ப்போம்.